31 ஆண்டுகளுக்குப்பின் மகிழ்ச்சி பொங்கிய பேரறிவாளன் வீடு.. கண்ணீர் கடலில் இனிப்புகளை பரிமாறி நெகிழ்ச்சி!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொண்டாட்டம் களை கட்டியது.

31 ஆண்டுகளுக்குப்பின் மகிழ்ச்சி  பொங்கிய பேரறிவாளன் வீடு.. கண்ணீர் கடலில் இனிப்புகளை பரிமாறி நெகிழ்ச்சி!!

தீர்ப்பு வழங்குவதை தொலைக்காட்சியில் பார்த்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீர் விட்டு தன் வாழ்நாள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடினார்.

உறவினர்கள் தனக்கு இனிப்பு வழங்கவே, அதனை மகனுக்கு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி பேரறிவாளனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பேரளிவாளன் விடுதலையான செய்தியைக் கேட்டு ஆனந்தக் கண்ணீருடன் ஒவ்வொருவராக வீட்டுக்கு வந்த உறவினர்கள், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர்.

உறவினர்கள் மட்டுமின்றி பேரறிவாளனை பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களும் கண்ணீர் விட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சிறியவர் முதல் பெரியவர் வரை இனிப்புகளைப் பரிமாரியும் மகிழ்வைப் பகிர்ந்தும் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உற்சாகமாகக் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வெளியே பறைக்குழுவினருடன் பறை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரளிவாளன்.