ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறையான சட்டங்கள் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தலைமை செயலகத்தில்  நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகரிகம் வளர்ந்தாலும் சாதிய கொடுமைகள் மற்றும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதாகவும், இத்தகைய சம்பவங்கள் தமக்கு வேதனையும், ஆத்திரத்தையும் தருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைச் சட்டத்தின் மூலமாக தான் ஓரளவு சரிசெய்ய முடியும் என்று குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தீண்டாமை தடை சட்டத்தை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும், இத்தகைய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல், பொருளாதார முன்னேற்றத்திற்கு திமுக அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.