இந்துக் கோயில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்....... அர்ஜூன் சம்பத்

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

இந்துக் கோயில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்....... அர்ஜூன் சம்பத்

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் கடந்த 5 ம் தேதி பெரியசாமி மலைக்கோயிலில் உள்ள டெரகோட்டா என்று அழைக்கப்படும் 14 சுடுமண் சுவாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 7ம்தேதி அதே ஊரியில் உள்ள பெரியாண்டவர்கள் கோயிலில் இருந்த 13 கற்சிலைகள் உடைக்கப்பட்டு, சிலைகளுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த எந்திர தகடுகள் காணாமல போயிருந்தது.

இது குறித்து சென்னையை சேர்ந்த நடராஜன் என்கிற நாதன்(35) என்பவரை பெரம்பலூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட சிலைகளை இன்று  இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிலைகளை உடைத்தன் காரணம் என்ன,  சிலைகளுக்கு அடியில் இருந்த விலை உயர்ந்த எந்திர தகடுகளை எடுப்பதற்காகத்தான் இந்த காரியத்தை செய்தார் என்று புலன் விசாரணையில் தெரியவருவதாக கூறினார்.

பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களிலும் இது மாதிரியான சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி, மற்றும் திருத்தேர் எரிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் மனநோயாளிகள் என்று முடிவு செய்ய முடியாது.

இதற்கு பின்னணியில் ஏதாவது இருக்கிறதா இதன் நோக்கம் என்ன.. வெறும் குற்றச்செயல் மட்டும் தானா என்பது குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை காவல் துறைக்கு நாங்கள் முன்வைக்கிறோம் என்றார். மேலும் இதுபோன்ற பாரம்பரியமிக்க கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்தார்.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அனுமதித்தை போல் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.