சிரமமின்றி வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள்...! தீபாவளியை கொண்டாட படையெடுக்கும் மக்கள்...!

சிரமமின்றி வெளியூர் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள்...! தீபாவளியை கொண்டாட படையெடுக்கும் மக்கள்...!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களுக்கு சிரமமின்றி செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் முன்னதாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4218 பேருந்துகள், அடுத்த மூன்று நாட்களுக்கு சேர்த்து மொத்தம் 10518 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதில் இன்று மட்டும் 120 பேருந்துகள் வெளியூர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்யவுள்ளதாக போக்குவரத்து கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் பண்டிகை விடுமுறை நாட்களில் வழக்கமாக கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டமாக காணப்படும்.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதால் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாக உள்ளன. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை ஆய்வு செய்து பின்னர் அவர்களின் உடமைகளை சோதனை செய்யும் வாகனமும் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு    வருகின்றனர்.

குறிப்பாக பேருந்து கட்டணங்களும் அதிக விலையில் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள சிற்றுண்டி போன்ற உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.