அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த அக்குபஞ்சர் சிகிச்சை மருத்துவமனைக்கு சீல்...!

அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த அக்குபஞ்சர் சிகிச்சை மருத்துவமனைக்கு சீல்...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுப்பாளையத்தில் தெய்வ சிகாமணி என்பவருக்கு சொந்தமான தனியார் பள்ளி ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி முழுமையாக மூடப்பட்ட நிலையில்இ கடந்த மூன்று மாதங்களாக ஜெய்சக்தி இயற்கை வாழ்வியல் மருத்துவமனை என்ற பெயரில் பள்ளி வளாக கட்டிடத்தில் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இங்கு இயன்முறை மருத்துவம் (psychotherapy) பயிலாமலேயே போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ஆகியோர் கடந்த 19-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். 

சிகிச்சை மையம் நடத்துவதற்கு அரசிடம் பெற்ற அனுமதி சான்றிதழையும், மருத்துவர்களின் கல்வி தகுதி சான்றிதழ்களோடு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதுவரை இங்கு எந்த சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் மீண்டும் சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். 

இந்நிலையில் இன்று மீண்டும் சுகாதாரத்துறை இணை இயக்குனர்,மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார மருத்துவ அலுவலர், பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர் மீண்டும் ஆய்வு மேற்கொண்டதில் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க கல்வி தகுதியில்லாத அருள் என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் அதற்காக கட்டண வசூல் செய்ததும் தெரிய வந்தது.

அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது உறுதியான நிலையில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை நடத்துவதற்கான அனுமதி சான்றிதழ், அங்கு பணி புரியும் மருத்துவர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களோடு நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல்லடம் அருகே 2 இடங்களில்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்லடம் மற்றும் வலசு பாளையத்தில் கல்வி தகுதி இல்லாதவர்கள் மருத்துவம் பார்த்ததால் இரண்டு அஃகு பஞ்சர் சிகிச்சை மையம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    | 2 நிமிடங்களிலேயே முடங்கிய மக்களவை...பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!