நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி-வழக்கமான பரிசோதனை தான் என லதா ரஜினிகாந்த் விளக்கம்

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி-வழக்கமான பரிசோதனை தான் என லதா ரஜினிகாந்த் விளக்கம்

அண்மையில் டெல்லி சென்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், வீட்டில் ஒய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே ரஜினிக்கு ஆண்டு தோறும் நடக்கும் வழக்கமான பரிசோதனை தான் என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.  பரிசோதனை முடிந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.