தபால்வாக்கு பெட்டி சாவியை தொலைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…  

தபால் வாக்கு பெட்டி சாவியை தொலைத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் பேட்டியளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மாவட்ட கவுன்சிலர் வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில்  நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன வாக்கு பெட்டியை திறக்க முற்பட்ட போது அதிகாரிகள் சாவியை தொலைத்து விட்டனர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுத்தியல் கொண்டு பெட்டியின் பூட்டை உடைத்து திறந்தனர்.

அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் பேசுகையில் வாக்கெண்ணும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தபால் பெட்டியின் சாவியைத் தொலைத்து அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.