பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி இடமாற்றம்!

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக 37 கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி இடமாற்றம்!

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக 37 கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பணியாற்றி வரும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள 7 அதிகாரிகள் என்று 37 கல்வித்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பள்ளிக்கல்வித்துறையில் பெரியளவில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக 37 அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வித்துறை சார்பான அறிவிப்புகள், பதிலுரைக்கான முன் தயாரிப்புப் பணிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், அதிகாரிகள் ஈடுபட்டிருந்த நிலையில், 37 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.