தனியார் பள்ளியில் சாதி ரீதியாக மோதிக் கொண்ட 9 மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை...

நெல்லை  மாவட்டம்  பாளயங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் சாதி ரீதியாக மோதிக் கொண்ட 9 மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

தனியார் பள்ளியில் சாதி ரீதியாக மோதிக் கொண்ட 9 மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை...

பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளியில் பயிலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களுக்கிடையே சைக்கிள் நிறுத்தும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது சமுதாய மோதலாக மாற, இருதரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில்  மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்டுஹ் மோதலில் ஈடுபட்ட ஒன்பது மாணவர்களுக்கும் இடமாறுதல் சான்றிதழ் வழங்கி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.