மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்...எப்போ தெரியுமா?தேதி இதோ!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்...எப்போ தெரியுமா?தேதி இதோ!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைக்க நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

செந்தில் பாலாஜி அறிக்கை:

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அனைவரும்  தங்களது மின் கட்டனத்தை எவ்வித சிரமமும் இன்றி ஏற்கனவே உள்ள நடை முறையின் படி செலுத்தலாம் என தெரிவித்துள்ளார். 

ஆதாரை இணைப்பதால் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என கூறியுள்ளார். 

இதையும் படிக்க: களைகட்டிய அண்ணாமலையார் திருக்கோயில்...தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்...!

வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

குடிமை, விவசாய மின் இணைப்புகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.