தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் தற்காலிக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.கே.எஸ். விஜயன் ஓராண்டு காலத்திற்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.