திராவிட தலைவர் என்றால் அது...அதிமுக கட்சியே...அமைச்சர் பகீர்!

திராவிட தலைவர் என்றால் அது...அதிமுக கட்சியே...அமைச்சர் பகீர்!

அதிமுக என்பது கட்சியே கிடையாது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார்.

பரிசுகளை வழங்கிய அமைச்சர்:

சிவகங்கை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மண்டல அளவிலான கைப்பந்துபோட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார். அதன்பின்னர், கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். 

மக்கள் நலனே முக்கியம்:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், 8 கோடி பேர் வசிக்க கூடிய தமிழ்நாட்டில் யாருக்கும் குறை இல்லாமல் ஆட்சி செய்வது என்பது கடினம், இருந்த போதிலும், அதையெல்லாம் மீறி தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மேலும், திராவிட மாடல் ஆட்சி குறித்து குறை சொல்பவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்த அவர், மக்களின் நலனே முக்கியம் என்று சிறப்பாக ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் முகஸ்டாலின் பின்னால் நாங்கள் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

கட்சியே கிடையாது:

தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுக என்பது கட்சியே கிடையாது என்று கூறிய அமைச்சர், தற்போது திராவிட தலைவர் என்றால் அது முதலமைச்சர் முகஸ்டாலின் மட்டும் தான் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார்.