திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது- கனிமொழி எம்பி

திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது- கனிமொழி எம்பி

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியில் இருக்கும் போது எதையும் செய்யாத அதிமுக, திமுக செய்வதை பார்த்து பயப்படுவதாக தெரிவித்தார். பயத்தின் வெளிப்பாடாகவே, திமுக எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்ட அவர், திமுகவின் செயல்பாடுகள்தான் அதிமுகவின் விமர்சனத்திற்கு பதிலாக இருக்கும் என்றார்.