அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். - முதலமைச்சர் ட்வீட்! அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். -  முதலமைச்சர் ட்வீட்! அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் ஓ.பன்னீர்செல்வம், முழுமையாக நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்: 

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக நலம் பெற விரும்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு:

முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வரும் நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை ஈ.பி.எஸ்.-ம், ஈ.பி.எஸ். ஆதரவாளர்களை ஓ.பி.எஸ்.-ம் மாறி மாறி நீக்கி வருகின்றனர். இந்த பின்னணியில் ஏற்கனவே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை தற்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பி.எஸ். என முதல்வர் ட்வீட் செய்துள்ளதால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.