அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி- தேர்தல் நடத்தும் அலுவலருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், தேர்தல் நடத்தும் அலுவலருடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், தியாகதுருகம் ஒன்றியத்தில் 355 பதவிகளுக்கு ஆயிரத்து 238 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது, அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர், தேர்தல் நடத்தும் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அ.தி.மு.க.வினரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். அங்கிருந்து வெளியே வந்த அ.தி.மு.க.வினர், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.