குப்பைகளில் ஊறிப்போன ஊரப்பாக்கம்!!! அவதியில் மக்கள்!!!

ஊரப்பாக்கம் ஊராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லாததால் சமூக நல கூடம் குப்பை கிடங்காக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

குப்பைகளில் ஊறிப்போன ஊரப்பாக்கம்!!! அவதியில் மக்கள்!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பை வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.

மேலும் படிக்க | நீட் தேர்வு அச்சத்தால் தீக்குளித்த மாணவி: 27 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்த சோகம்...

இதற்கென குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த குப்பைகள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வந்ததன் காரணமாக அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டு விபத்துக்களும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இதன் காரணமாக அங்கிருந்த குப்பை கிடங்கு அகற்றப்பட்டு தற்போது குப்பை கொட்ட இடமில்லாததால் ஊருக்குள் இருக்கும் முக்கிய பிரதான சாலை அருகே சமூக நலக்கூட வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகமானதால் குப்பை கொட்டும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீகிறது. இந்நிலையில் குப்பைகளை கொண்டு வரும் பொதுமக்கள் சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் முழுவதும் குப்பைகள் மலை போல் குவிந்து காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளை அள்ள முடியாமல் கொட்டுவதற்கு இடமில்லாமலும் ஊழியர்கள் தவிக்கின்றனர். குப்பைகளில் இருந்து வெளியேரும் தூர்நாற்றத்தால் மக்களுக்கு தொற்று நோய் பரவி உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 வெடிகுண்டு, அரைகிலோ கஞ்சா பறிமுதல்- தப்பியோடியவருக்கு வலைவீச்சு

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பல முறை பொதுமக்கள் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், செங்கல்பட்டு ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.