எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்...உரிய மாற்று இடம் வழங்கினால் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் பதில்!

எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்...உரிய மாற்று இடம் வழங்கினால் ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் பதில்!

பவானிசாகர் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வன நிலம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் கூறினார். 


சட்டப்பேரவையில் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வன நிலத்தை அளிக்க வேண்டியது குறித்து அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், தனபால், கே.சி. கருப்பண்ணன், பண்ணாரி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு 5 ஏக்கர் வனத்துறை நிலத்தை வழங்க வேண்டும் என்றும், அதற்கு மாற்று இடம் வழங்க தயாராக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.  

இதையும் படிக்க : சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி பதில்!

இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஏற்கனவே, வனத்துறைக்கு சொந்தமான 8 புள்ளி 9 ஹெக்டேர்  இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வன நிலத்திற்கு பதிலாக வழங்கப்படும் நிலம் செங்குத்தாக இருப்பதால் மரம் நடுவதற்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறினார். வனத்துறைக்கு உரிய மாற்று இடம் வழங்கினால் வன நிலம் வழங்குவது குறித்து கூட்டு ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.