காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்...!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தலையில் படுகாயம் அடைந்து வந்த நபருக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 


தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்த நபருக்கு  ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றும் ஒருவர்  அளித்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிக்க : எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்!

மருத்துவர்கள், செவிலியர்கள் அளிக்க வேண்டிய சிகிச்சையை அங்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.