உணவுக்கு வழியின்றி செஸ் ஒலிம்பியாட் வாய்ப்பை தவறவிட்ட பேராசிரியை...!

உணவுக்கு வழியின்றி செஸ் ஒலிம்பியாட் வாய்ப்பை தவறவிட்ட பேராசிரியை...!

உணவுக்கு வழியில்லாததால் தனது செஸ் ஒலிம்பியாட் வாய்ப்பு பறி போய்விட்டதாக ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை சொர்ணலதா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கல்லூரி பேராசிரியர்:

சென்னை மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்ப்பதற்காக மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை சொர்ணலதா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

உணவுக்கு கூட பணம் இல்லை:

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய 12 வயதில் பிரேசிலில் நடைபெறவிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டதை சொர்ணலதா நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்கள் போட்டி நடைபெற்ற நிலையில், உணவுக்கு பணம் இல்லாததால், போட்டியின்  போது மயக்கம் அடைந்தாகவும் கூறினார்.  

கண்ணீர் மல்க பேட்டி:

இதன் காரணமாக, என்னால்  தொடர்ந்து விளையாட முடியவில்லை. அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டது தற்போது வரை எனக்கு மிகுந்த வேதனையளித்ததாகவும் தெரிவித்தார். ஆனால்,  தற்போது தமிழகத்தில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகிவிட்டார்கள் என்றும், இதே போன்று நிறைய நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பேராசிரியை சொர்ணலதா கண்ணீர் மல்க கூறினார்..