சிமெண்ட் இல்லாமல் வெறும் மணலால் கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி..!

சிமெண்ட் இல்லாமல் வெறும் மணலால் கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி..!


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடத்தை சிமெண்ட் இல்லாமல் வெறும் மணலால் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

வந்தவாசி அடுத்த எய்ப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் முற்றிலும் பழுதடைந்தது. இந்த காரணத்தால் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை கட்டி வந்தனர்.

இந்த நிலையில் சிறிய குழந்தைகள் பயில்வதற்காக  தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கான்கிரீட் பீம் முற்றிலும் கீழே இறங்கி உள்ளது. மேலும் கட்டிடத்தின் சுவர்கள் முழுவதும் சிமெண்ட் இல்லாமல் முற்றிலும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சிமெண்டுகள் பெயர்ந்து உதிர்ந்து கீழே விழும்  நிலையில் உள்ளது. 

இப்படி, முற்றிலும் மோசமான முறையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டு வருவதாக கூறி கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து,  அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை முறையாக ஆய்வு செய்து கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க    | இரண்டு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காத தார் சாலை: மக்கள் அச்சத்துடன் பயணம்!