உருமாறிய கொரோனா...மீண்டும் முதலில் இருந்தா...அவசர ஆலோசனையில் எடுத்த நடவடிக்கை என்ன?

உருமாறிய கொரோனா...மீண்டும் முதலில் இருந்தா...அவசர ஆலோசனையில் எடுத்த நடவடிக்கை என்ன?

உருமாறிய புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் ஆலோசனை:

சீனாவில் பரவி வரும் 'பி.எப்., - 7' என்ற புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குஜராத்தில் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதையும் படிக்க: மீண்டும் பரவுகிறதா கொரோனா...? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசனை:

சென்னை தலைமை செயலகத்தில்  நடந்த கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அறிவுரை வழங்கிய முதலமைச்சர்:

அதில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும் போது விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்கவும், அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.