பிரதமரை வரவேற்க அமெரிக்காவில் பிரமாண்ட பேரணி!

பிரதமரை வரவேற்க அமெரிக்காவில் பிரமாண்ட பேரணி!

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்கும் வகையில், இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் வாஷிங்டனில் ஒற்றுமை பேரணி ஒத்திகை நடத்தினர். 

பிரதமா் மோடி வரும் 22-ம் தேதி அமொிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரயாட உள்ளார். இவை மட்டுமின்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் வாஷிங்டனில் ஒற்றுமை பேரணி ஒத்திகை நடத்தினர். 

அப்போது அவா்கள் இந்திய மற்றும் அமொிக்க கொடிகள், இந்திய பிரதமர் மோடியை வரவேற்கும் வகையிலான பாதாகைகள் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவாறு வரவேற்பு முழக்கங்களை எழுப்பினா். இதில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனா். இந்திய பிரதமர் அமெரிக்கா வரும்பொழுது அவரை வரவேற்கும் விதமாக இந்த பேரணி நடைபெற உள்ளது. குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:'வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்' வேலூரில் பரபரப்பு!