அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல்...!

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதல்..!

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல்...!

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் மாதா கோவில் எதிரே பிரதான சாலையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேருந்து தேவகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்றது. ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, புதுக்கோட்டை முத்துடையான்பட்டியில் இருந்து சென்றபோது பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இதில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.  பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த எட்டு பேரும் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது.