நெற்பயிர் ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும்...தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

நெற்பயிர் ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும்...தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக  சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் :

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக லட்சக்கனக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.