சென்னையில் பாதாள சாக்கடை கிணற்றில்.... தவறி விழுந்த சிறுவன்....!

சென்னையில் பாதாள சாக்கடை கிணற்றில்.... தவறி விழுந்த சிறுவன்....!

சென்னை  தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் கிழக்கு 11வது பிளாக் ,கண்ணதாசன் சாலையில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியதிற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த முகவரியில் சுமார் 600 அடி பரப்பளவில் கைவிடப்பட்ட நிலையில்  பாழடைந்த பாதாள சாக்கடை கிணறு  30அடி ஆழத்தில் உள்ளது. 

இந்த நிலையில், இதே பகுதியில் அருகில் உள்ள சிமென்ட் சாலையில் அபிஷேக் என்ற சிறுவன்  (வயது 14), தனது நண்பர்களுடன்  கிரிக்கெட் விளையாடும் பொழுது  தவறி விழுந்த பந்தை எடுக்க அபிஷேக் மதில் சுவர் ஏறி பாதாள சாக்கடை கிணற்றில் பந்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது 30 அடி ஆழம் கொண்டகிணற்றில்  கழிவுநீருடன் குப்பை காணப்பட்ட இடத்தில்  பந்தை  எடுக்க முயற்சி செய்யும்போது தலைகீழாகத்  தவறி விழுந்தார்.

இதையும் படிக்க    ]  கொடைக்கானலில் கட்டண கொள்ளையில் உணவகங்கள்...! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்... !!

இதனையடுத்து, தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெஜெ நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள்,  சிறுவனை கயிறு கொண்டு உயிருடன் மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

இதனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியதிற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற பயன் இல்லாமல் இருக்கிற பாதாள சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என அந்த பகுதமக்கள் சார்பாகக்  கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க    ]  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து... பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கருத்து...!