"அதானி மீது உள்ள குற்றச்சாட்டிற்கு அமைதி காக்கும் பிரதமரும் குற்றவாளி தான்" ஆ ராசா!

"அதானி மீது உள்ள குற்றச்சாட்டிற்கு அமைதி காக்கும் பிரதமரும் குற்றவாளி தான்" ஆ ராசா!

தஞ்சாவூரில் நடந்த விழா ஒன்றில், கலந்துகொண்ட திமுகவின் துணை பொதுச் செயலாளர், ஆ. ராசா, "அதானியின் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு, அமைதியாக இருக்கும் மோடியும் ஒரு பிராடு தான்", என பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கும்பகோணம் மாநகர திமுக கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுகவின்  துணை பொதுச்செயலாளர் ஆர்.ராசா  பேசியவதாவது, "கலைஞரின் பேனா  இல்லை என்றால்  எடப்பாடி முதலமைச்சராய் ஆகியிருக்க முடியாது, கலைஞரின் பேனாவால் தான் அண்ணாமலை ஐபிஸ் அதிகாரி, வானதி சீனிவாசன்  ஆகியோர் படித்திருக்க முடியும்" என கூறியுள்ளார்.

மேலும், "அதானியை மோடி வெளிநாடுகளுக்கு ஒப்பந்தம் செய்வதற்கு அழைத்து செல்கிறார். பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கத்தின் கணக்கீட்டை குறைத்தும், அதிகரித்தும் காட்டுவதால் அதானி ஒரு அக்கவுண்டிங் பிராடு என்றால், அதானியின் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு, அமைதியாக இருக்கும் மோடியும் ஒரு பிராடு தான்" என்றும் சாடியுள்ளார்.

மேலும், மோடியின் அரசு, பிபிசி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்த போது, பிரிட்டன் அரசு அமைதியாக இருந்ததற்கு காரணம், மோடியுடன் போடும் ஒப்பந்தம் மட்டும் தான். அந்த ஒப்பந்தத்தால், இந்தியாவில் அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதால் தான் பிரிட்டன் அரசும், அமெரிக்க அரசும் அமைதியாக உள்ளது எனவும் க்குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: காதலன் கைதானதால், வன்முறையில் ஈடுபட்ட காதலி... சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!!