சாகர் கவாச்சி என்ற 48 மணி நேர ஆப்ரேசன்.. புதுச்சேரியில் தொடக்கம்!!

கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் சாகர் கவாச்சி என்ற 48 மணி நேர ஆப்ரேசன் தொடங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சாகர் கவாச்சி என்ற 48 மணி நேர ஆப்ரேசன்.. புதுச்சேரியில்  தொடக்கம்!!

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையிலும் , நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும் சாகர் கவாச்சி என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் 48 மணி நேர ஒத்திகை தொடங்கியுள்ளது. காவலர்களே தீவிரவாதிகளைப் போல மாறுவேடத்தில் கடல் மார்கமாக ஊருக்குள் ஊடுருவ முயற்ச்சி செய்வர். அதை பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் அவர்களை தடுத்து கைது செய்ய வேண்டும். 

இன்று காலை முதலே அதற்கான தடுப்பு பணிகள் ஆரம்பமானது.. புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளான காலப்பட்டு, முத்தியால்பேட்டை, தெங்காய்திட்டு துறைமுகம், வீராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஒத்திகையில் இந்திய கடற்படை, புதுச்சேரி கடலோர காவல் படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், மார்க்கெட், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் திடீர் சோதனைகளும் மேற்கொள்ள உள்ளனர்.