புனேவில் இருந்து 9.48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது

சென்னை விமானநிலையத்துக்கு இன்று 9 லட்சத்து 48  ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 79  பாா்சல்களில்  வந்து சோ்ந்தது.

புனேவில் இருந்து 9.48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது

தமிழக முதலமைச்சா் மத்திய  அரசிடம் வாரத்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளாா்

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு இன்று மேலும் 9.48  லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை  புனேவில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்துள்ளது.

அந்த 9. 48 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 79  பாா்சல்கள் இண்டிகோ  விமானம் மூலம்  புனேவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை,தமிழ்நாடு மக்கள்  நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.