ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவிற்கு மேலும் 9 பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டு போட்டியின் 11வது நாள் இறுதியில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றியது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். கடைசி நொடியில் ஜப்பான் வீராங்கனையை பின்னுக்கு தள்ளி முதலிடத்ததை பிடித்தார்.

இதேபோல் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மகளிர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீரர் முகமது அப்சல் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அதேபோல் ஆயிரத்து 500 மீட்டர் டெகாத்லான் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் அவர் 7 ஆயிரத்து 666 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம்பிடித்தார். மும்முனை தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் சித்திரவேல் 16 புள்ளி ஆறு எட்டு மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

400 மீட்டர் மகளிர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா வெண்கலத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் வித்யா 55 புள்ளி ஆறு எட்டு விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அசத்தினார்.

மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணி 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்று தொடர்ந்து 4ஆம் இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!