8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 8 ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் மற்றும் 16 ஐ.பி. எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2 ஆயிரத்து 6ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஹனிஸ் சப்ரா, அஜய் யாதவ், ஜி.லக்‌ஷ்மி பிரியா, எஸ்.ஜெயந்தி, டாக்டர்.பி.சங்கர், கே.விவேகானந்தன், ஏ.ஞானசேகரன் மற்றும் டி. எஸ்.ராஜசேகர் ஆகிய 8 ஐ.ஏ. எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2 ஆயிரத்து 9 பேட்ச்சை சேர்ந்த 16 ஐ.பி. எஸ். அதிகாரிகளுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பணிகளில் பிரதிநிதித்துவம் பெற இவர்கள் தகுதியுடையவர்கள் எனவும், அடுத்து வரும் பணியிட மாற்றங்களின்போது இவர்களுக்கு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.