7-வது கட்ட பேச்சு வார்த்தையில் ஓகே ஆன ஒப்பந்தம்...ஆனால் சிறிய திருத்தம்...!

7-வது கட்ட பேச்சு வார்த்தையில் ஓகே ஆன ஒப்பந்தம்...ஆனால் சிறிய திருத்தம்...!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை:

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சிப் பள்ளியில், 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒப்பந்தம் கையெழுத்து:

பேச்சுவார்த்தையின் 2-வது நாளான இன்று ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்விற்கு உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, 14 வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்சமாக 2,012 ரூபாயும், அதிகபட்சமாக 7,981 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், நடத்துநர்களுக்கு குறைந்த பட்சமாக 1,965 ரூபாயும், அதிகபட்சமாக 6,640 ரூபாய் உயரும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/worldnews/The-Sri-Lankan-government-has-banned-300-imported-goods-in-response-to-the-severe-economic-crisis-in-Sri-Lanka

திருத்தம்:

முன்னதாக, இதில் முக்கிய திருத்தமாக 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதை மாற்றி, மத்திய அரசின் பே மேட்ரிக்ஸ் முறைப்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிஐடியு மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் வெளிநடப்புச் செய்தன. அரசின் நடவடிக்கையை கண்டித்து  நாளை போராட்டம் நடத்த உள்ளதாகவும் சௌந்தர்ராஜன் தெரிவித்திருக்கிறார்.