75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்....! மகளிருக்கான மினி மாரத்தான் போட்டி...!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருக்கோவிலூரில் மகளிர் மினி மாரத்தான் போட்டி...

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்....! மகளிருக்கான மினி மாரத்தான் போட்டி...!

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக  மூவர்ண தேசியக் கொடியை அனைவரும் இல்லம்தோறும் ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். அதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மகளிர் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அங்கவை - சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய, இந்த மகளிர் மினி மாரத்தான் போட்டியை, நகர் மன்ற தலைவர் டி.என்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, தேசத்தைக் காத்திடுவோம், சுதந்திரத்தைக் கொண்டாடுவோம், விடுதலைப் போராட்ட வீரர்களை போற்றி வணங்கிடுவோம்  என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.