தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களில் அதிகரித்தது மதுபானம் விற்பனை!

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களில் ரூ.634 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. இதனிடையே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். 

அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மூன்று நாட்களில் ரூ.634 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இதையும் படிக்க : குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறப்பு... !

குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 11 மற்றும் தீபாவளி தினமான நவம்பர் 12 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11ல் ரூ.221 கோடிக்கும், நவம்பர் 12ல் ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நேற்று மட்டும் 166.37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு மொத்தமாக மூன்று நாட்களில் ரூ.634 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.