புனேவில் இருந்து 6 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை.........

புனேவில் இருந்து விமானத்தின் மூலம் 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

புனேவில் இருந்து 6 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை.........

தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள்  அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளதால் கடந்த 3 வாரங்களாக சிறப்பு மெகா முகாம் நடந்ததப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 4 கோடியே 94  லட்சத்தி 73 ஆயிரம் கோவிட்ஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன.   

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு மதியம் வந்த விமானத்தில் 50 பெட்டிகளில் 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. 3வது நாளாக இன்று வரை 22 லட்சத்தது 60 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.