தமிழ் வருட பிறப்பு, ரம்ஜான் விடுமுறை... ஊருக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள்...!!

தமிழ் வருட பிறப்பு, ரம்ஜான் விடுமுறை... ஊருக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள்...!!

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல 500  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப் பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் வர  இருக்கின்றன. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாழக்கிழமை கூடுதலாக 300 சிறப்பு  பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 22 ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஏப்ரல் 21 ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 200  சிறப்பு பேருந்துகள் இயக்க  திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தொடர்  விடுமுறை தினத்தை முன்னிட்டு 500 சிறப்பு  பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் படி தமிழ் வருட பிறப்புக்கு 300 பேருந்துகளும் ரம்ஜான் பண்டிகைக்கு 200 பேருந்துகளும் என்று மொத்தம் 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளதாக  தகவல் தெரிவித்தனர்

மேலும், தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 400 கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.