மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...தமிழக அரசு அறிவிப்பு!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது, தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

இதனைத் தொடர்ந்து, 500 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மூடப்படும் கடைகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாளைமுதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.