பிரபல கோவிலில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்… மக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் அதிக அளவில் பக்தர்கள் கூடி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான உறவினர்கள் கோவிலுக்குள் திரண்டதால் கோரனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் மூன்றாம் பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களான தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாற்பத்தி ஏழு கோயில்கள் வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மூடப்பட்டிருக்கும் என இந்து அறநிலையத் துறை தெரிவித்திருந்தது.

ஆனால் இன்று முகூர்த்த நாள் என்பதால் குன்றத்தூர் சுப்ரமணியசாமி முருகன் கோயிலில் சுமார் 50க்கும் அதிகமான திருமணம் நடைபெற்றுள்ளது இந்த திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான உறவினர்கள் கோயிலுக்குள் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது வார இறுதி நாட்களில் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திருமணங்கள் நடத்துவதற்கு மட்டும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது சமூக ஆர்வலர்களையும் பக்தர்களையும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தரிசனம் செய்ய அனுமதி மறுக்கும் கோயில் நிர்வாகம் இதுபோல் திருமணத்தை நடத்திக் கொள்ள மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என்பது பக்தர்கள்  கேள்வியாக உள்ளது.