குற்றால அருவியில் வெள்ள பெருக்கில் சிக்கிய 5 பெண்கள்...! 3 பேர் உயிருடன் மீட்பு..!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த திடீர் கனமழையால் குற்றாலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதில் 2 பெண்கள் சடலமாகவும், 3 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

குற்றால அருவியில் வெள்ள பெருக்கில் சிக்கிய 5 பெண்கள்...! 3 பேர் உயிருடன் மீட்பு..!

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி இருப்பதால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த கன மழையால் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பெண்கள் வெள்ளத்தில் அடித்து சென்றனர். 

பின்னர், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். அப்போது அண்ணா சிலை அருகே கடலூரை சேர்த்த 70 வயதான மல்லிகா என்பவரின் உடலும், அருவிக் கரை அருகே சென்னையை சேர்ந்த கலாவதி என்பவரது உடலும் கண்டெடுக்கப்பட்டது. மற்ற 3 பெண்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

மேலும் யாரேனும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதனால் தற்போது 
வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.