கன்னியாகுமரி, விருதுநகர், தேனி உட்பட 5 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, விருதுநகர், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, விருதுநகர், தேனி உட்பட 5 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மாலத்தீவிலிருந்து  வடகடலோர கர்நாடகா  வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள்,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடிமின்னலுடன்  மிதமான மழையும் எனவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடனே  காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  தென் தமிழக கடலோர பகுதி,  குமரிக்கடல் பகுதி,  மாலத்தீவு, தென் கேரள கடலோர பகுதி மற்றும் லட்சதீவு  பகுதியில்  மணிக்கு  40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.