தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ம் ஆண்டு.. உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமாரரெட்டியார் புரத்தில், உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ம் ஆண்டு.. உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி!!

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று இன்றோடு 4 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயிரிழந்தோரின் படங்களுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், வழக்கை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதா கோரிக்கை விடுத்துள்ளார்.