பெருந்தலைவர் காமராஜரின் 47-வது ஆண்டு நினைவு  தினம்... காந்திய வழியில் கடமையாற்றி முதலமைச்சராக அரியணை ஏறியவர்...

பெருந்தலைவர் காமராஜரின் 47  வது  ஆண்டு நினைவு  தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜரின் 47-வது ஆண்டு நினைவு  தினம்... காந்திய வழியில் கடமையாற்றி முதலமைச்சராக அரியணை ஏறியவர்...

காமராஜர். அரசியலில் எத்தனையோ தலைவர்கள், புதிதாக முளைத்துக் கொண்டிருந்தாலும், அரசியலில் பெரும் புகழை எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு வேர் விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்பவர்தான் கர்மவீரர் காமராஜர். படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் என்ற எத்தனையோ பட்டங்களுக்கு சொந்தக்காரரான காமராஜரை கிங்மேக்கர் என்று அழைப்பதுதான் வழக்கம். 

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும் 'என்ற வரிகளுக்கு 100 சதவீதம் பொருத்தமானவர் என்றால் அது கர்மவீரர் காமராஜர் ஒருவர்தான். 

காங்கிரஸ் கட்சியின் கரம் பிடித்து 16 வயதில் நடக்கத் தொடங்கிய காமராஜரை பின்னாளில், கட்சியின் தலைவராக மாற்றியது அவரின் அயராத உழைப்பு. அறம் சார்ந்த அரசியலை தன் வழியாக கொண்டார் கர்ம வீரர். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாய் விளங்கினார். தாய்நாட்டிற்காக 9ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து,காந்திய வழியில் கடமையாற்றிய காமராஜரை, 1954ல் முதலமைச்சராக அரியணை ஏற்றி மக்கள்அழகு பார்த்தனர்.

கடமையையே கல்யாணம் செய்து கொண்டவர். நெருக்கடியான சமயங்களில் மக்களுக்கு வழிகாட்டியாய், எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர். சாமானிய மக்களின் துயர் துடைப்பவராய், அவர்களின் நிலையில் நின்று பிரச்னைகளை நோக்குபவராகவும் திகழ்ந்த காமராஜரை, மக்களுக்குப் பிடித்திருந்தது. பகட்டுகள் இல்லாத அந்த பச்சைத் தமிழன் அனைவரின் மனம் கவர்ந்தவராய் இருந்தார்.
காந்திய நெறியில் வாழ்ந்த காமராஜர், காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளான இன்றைய தினத்தில் மறைந்தார். காந்தியத்தின் கடைசித் துாண் சாய்ந்து இன்றோடு 47 ஆண்டுகள் கடந்து விட்டது.

ஆனாலும், காமராஜரின் புகழ் அனைவரிடத்திலும் படர்ந்திருக்கிறது என்றால், அது காமராஜரின் நேர்மைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் காட்டிய வழியில் பயணிக்க நினைத்தாலும், யாராலும் அவரைப் போல வாழ்க்கையை கழிப்பதற்கு முடியவில்லை என்பதும் நிதர்சமான உண்மை. ஏனென்றால், காமராஜர் போல வாழ்வதற்கும், காமராஜர் போல ஆட்சி நடத்துவதற்கும், அவர் ஒருவரால்தான் முடியும். 

அரசியல் என்றாலே சாக்கடைதான் என்ற மோசமான உருவகம் அனைவரிடத்திலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அந்த அரசியலில் நேர்மையோடு வாழ்ந்து, உண்மையான தலைவர் என்றால் யார் எனஉலகுக்கு உணர்த்தியவர்தான் கர்மவீரர் காமராஜரின் புகழ் வானளவு வளர்ந்திருக்கும். என்றுமே நிலைத்திருக்கும்.