தமிழகத்தில் ஒரே நாளில் 468 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு...

தமிழகத்தில் ஒரே நாளில் 468 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு...

தமிழகத்தில்  34  ஆயிரத்து 285 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்  வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில்  468  பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்தநிலையில்,  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு  குறித்து  அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்  தமிழகத்தில்  ஒரே நாளில் 34  ஆயிரத்து 285  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம்  மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால்  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்   468 பேர் உயிரிழந்துள்ளதாகவம் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில்  இன்று 28  ஆயிரத்து 745 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளதாகவும்  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.