45வது சென்னை புத்தக காட்சி: தொல்லியல் துறை சார்பாக தொல் பொருள் கண்காட்சி அமைப்பு

45வது சென்னை புத்தக காட்சியில் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

45வது சென்னை புத்தக காட்சி: தொல்லியல் துறை சார்பாக தொல் பொருள் கண்காட்சி அமைப்பு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 45வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொரொனா பாதிப்பு காரணமாக 800 அரங்குகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், பள்ளி கல்வித் துறை, சுகாதாரத்துறை மற்றும் மேலாண்மைத்துறை ஆகிய அரசுத்துறை அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, பொருநை ஆற்றங்கரை நாகரீக தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்கள், இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்மணிகள் கிடைத்த அகழாய்வு, முதுமக்கள் தாழி மற்றும் அகழாய்வு குழியில் புதைந்த நிலையில் உள்ள ஈமத்தாழிகள், சுடுமண் உருவங்கள், அணிகலன்கள் உள்ளிட்ட ஏராளமான அகழாய்வுப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் மெய்நிகர் பார்வை மூலமாக, அரங்கிலிருந்தே அகழாய்வு பணிகளைக் கானும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.