உலக சிலம்ப போட்டியில் 38 தங்க பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் சாதனை!!

உலக சிலம்ப போட்டியில் 38 தங்க பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் சாதனை!!

நேபாள நாட்டில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 38 பேர் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

உலக சிலம்பம் போட்டி நேபாளம் நாட்டில்  போக்ரா சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 15-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெவ்வேறு வயதுடைய தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், 38 தங்க பதக்கங்களை தமிழக சிலம்ப வீரர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி திரும்பிய அவர்கள் 38 தங்க பதக்கங்களை தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அனைத்து சிலம்ப கூட்டமைப்பின் நிறுவனர் ரவி தெரிவித்தார்.