நடுக்கடலில் தவித்த நாகை மீனவர்கள் 34 பேர் பத்திரமாக மீட்பு..!

நடுக்கடலில் தவித்த நாகை மீனவர்கள் 34 பேர் பத்திரமாக மீட்பு..!

விசைப்படகில் ஏற்பட்ட இஞ்சின் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிக்கொண்ட நாகை மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் குணசேகரன் தலைமையில் 10பேர் கடந்த 8ஆம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த அதே ஆழ்கடல் பகுதியில் அதே மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் தலைமையில் சுமார் 11பேர் 24ஆம் தேதி மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து ஞான பண்டிதன் என்பருடைய தலைமையில் 12பேர் கொண்ட மீனவர்கள் ஆழ்கடல் பகுதியைநோக்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

மூன்று விசைப்படகில் இருப்பவர்களும் ஆழ்கடலில் அருகருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப்படகுகளில் இஞ்சின் வலை போன்றவை பழுதாகியுள்ளது.  மீதமிருந்த மற்றொரு படகானது காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்து இருந்தநிலையில், அந்தமானை நோக்கி மீன்பிடிக்க சென்ற இவர்களை அவ்வழியாக கடல் மேல் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படையினர் பார்த்துள்ளனர்

இவ்வாறாக வெவ்வேறு விசைப்படகுகளில் தத்தளித்து கொண்டிருந்த சுமார் 34  மீனவர்களை கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து வந்து வடசென்னை காசிமேடு துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வாழ்வா சாவா என தெரியாமல் பயத்தில் கடல் மேலே கிட்டதட்ட இரண்டு நாட்களாக பரிதவித்த மீனவர்களை காப்பாற்றிய அதிகாரிகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிக்க   |  சென்னை; அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு!