திருடு போன 301 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு..

நாமக்கல் மாவட்டம் அருகே கடந்த 2019 ஆண்டு முதல் திருடு போன சுமார் 60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்களை மீட்ட காவல்துறையினர், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருடு போன 301 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு..

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செல்போன் திருட்டினை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் படி இதுவரை சுமார் 60 லட்சம் மதிப்பிலான 301 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் கலந்து கொண்டு திருடு போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை 585 மொபைல் போன்கள் திருடு போகியுள்ளது என்றும் இதில் 301 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட மொபைல்களை உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது என கூறினார்.

எஞ்சிய 184 மொபைல்கள் 10 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்படும் என கூறிய அவர், ஆன்லைன் தொடர்பான மோசடி, செல்போன் திருட்டு போன்ற சைபர் கிரைம் புகார்களை 155260 என்ற எண்ணிற்கும், குழந்தை திருமணம் போன்ற புகார்களை 1098 என்ற எண்ணிற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 181 என்ற எண்ணிற்கும் தெரியபடுத்தலாம் என்றார்.