தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.. ‘ஸ்டிராங் ரூம்’ அருகே செல்ல கடும் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.. ‘ஸ்டிராங் ரூம்’ அருகே செல்ல கடும் கட்டுப்பாடுகள்

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, ஸ்டராங் ரூமீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதே போன்று திருச்சி மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகளில் வாக்கு எந்திரங்கள் 7 வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிதம்பரம் நகராட்சியின் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள்  ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.