சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து… 2 பேர் பலி!  

தர்மபுரி மாவட்டம தொப்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதிய சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துடன் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தருமபுரியில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகன்ம் ஒன்று தொப்பூர் அருகே திடீரென பழுதாகி நின்றது. இந்த வாகனத்தைப் பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த 9 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் மீது மோதியது. இந்த லாரியைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி தலைக்குப்புற கவிழ்ந்தன.

இந்த விபத்தில் லாரியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சியைச் சேர்ந்த ரத்தினவேல் உள்பட இருவர் நிகழ்விடத்திலிலேயே  உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால், சாலை முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன. மேலும் வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை சேலம் டி.ஐ.ஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்