மாபெரும் 25 ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நிகழ்ச்சி...!

மாபெரும் 25 ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நிகழ்ச்சி...!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும், சென்னை பெரம்பூர் விவேகானந்தா பள்ளியும் இணைந்து 25 ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.


சென்னை விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஒவ்வொரு வருடமும் ரத்ததான முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று 25 ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, விவேகானந்தா வித்யாலயா பள்ளி, ஆர் எஸ் எஸ் அமைப்பு உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதன் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் இன்று ரத்த தான முகாம்  விமர்சியாக நடைபெற்றது.

இதையும் படிக்க : ’தீ பரவட்டும்’ என்ற ஹேஷ்டேக்குடன் நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்...!

இதில் இளைஞர்கள், பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது ரத்தத்தை தானமாக வழங்கினார்கள். ஒவ்வொரு ரத்ததான முகாமிலும் மனித உடலில் இருந்து 350 மில்லி மட்டுமே ரத்தம் எடுக்கப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் ரத்த தானமானது மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என பள்ளியில் தாளாளரும் மருத்துமனை தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது. 

தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மாணவர்களும் இதுபோன்று தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்க வேண்டும் எனவும், இளைஞர்கள் தங்களுடைய ரத்தத்தை கொடுப்பதன் மூலம் மற்ற உயிர்களும் காப்பாற்றப்படுகிறது என்பதற்காக பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளியின் தாளாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசு சார்பில் 350 ரத்த முகாம்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் தினந்தோறும் 30 லிருந்து 40 தன்னார்வலர்கள் தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கி வருகிறார்கள்.