தமிழ்நாட்டின் 25 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது தமிழக அரசு!

தமிழ்நாட்டின் 25 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவினால் தமிழகத்தில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 ல் வடகிழக்கு பருவமழை குறைந்தளவில் பொழிந்த காரணத்தினால், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 25 வட்டாரங்களை வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : கனமழையால் வெள்ளக் காடான மும்பை...ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோயில், மணமேல்குடி ஆகிய பகுதிகள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 23 வட்டாரங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.